Sat. Jan 10th, 2026

குடியாத்தம், டிசம்பர் 19:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில்,
மீனூர் கொல்லை மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு செல்ல பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாலையில்,
சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி,
ஊர் நாட்டாமைதாரர் எம்.நா. சம்பத்,
ஊர் தர்மகர்த்தா கே. முருகன்,
ஊர் மேட்டுக்குடியைச் சேர்ந்த எம். தினகரன்
மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,
மேற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த வழித்தடம் மீண்டும் அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில்,
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS