குடியாத்தம், டிசம்பர் 19:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள
பழமை வாய்ந்த அருள்மிகு சீதா ராம ஆஞ்சநேயர் ஆலயத்தில்,
ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீராமர், சீதாலட்சுமி, லட்சுமணன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு
சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,
தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.
மேலும்,
மூலவர் சீதா ராம ஆஞ்சநேயர் சுவாமிக்கு
வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு,
சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க,
காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு,
நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
அறநிலையத் துறை ஆய்வர் சு. பாரி,
தக்கார் மு. பாலசுப்பிரமணியம்,
செயல் அலுவலர் மா. சண்முகம்,
கோவில் தலைவர் மாயா எம். பாஸ்கர்,
வழக்கறிஞர்கள் கே. எம். பூபதி, ஏ. கே. ரகுராமன்,
இ. ரகுராமன், டி. ஆதிகேசவன், டி. பார்த்திபன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்