குடியாத்தம், டிசம்பர் 18 :
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.
இந்த பேரணி குடியாத்தம் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்,
ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம்,
பரவகல் உதவி செயற்பொறியாளர் கலைசெழியன்,
பாக்கம் உதவி செயற்பொறியாளர் பி. வெங்கடேசன்,
பேர்ணாம்பட்டு உதவி செயற்பொறியாளர் ஆர். செந்தில்குமார்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், அனைத்து கோட்ட அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் மின் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, மின் பாதுகாப்பு மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்