சென்னை, டிசம்பர் 18 :
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கே.வி. குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதிமுக தலைமையகத்தில் மனு அளித்துள்ளார்.
குருசாமி தொழிலில் கட்டிட ஒப்பந்ததாரராகவும், மேஸ்திரி பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியல் ரீதியாக, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் சிவராஜ்புரம் கிளைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.
மேலும், இவர்
கல்லப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்,
கல்லப்பாடி ஊராட்சி வார்டு உறுப்பினர்,
அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்–ஆசிரியர் கழகம் (PTA) துணைத் தலைவர்
ஆகிய பொறுப்புகளை ஏற்கனவே வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போதும் கே.வி. குப்பம் சட்டமன்ற தனித் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் பலமுறை விருப்ப மனு அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் விருப்ப மனு அளித்தார். அப்போது உறுதிமொழி ஆணையர் வழக்கறிஞர் செண்டத்தூர் கனிமொழி, லிங்குன்றம் பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது, ஒரு மாநில தொழிற்சங்கச் செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
