Tue. Dec 16th, 2025



சுரண்டை | டிசம்பர் 15 –

சுரண்டை நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட 8-வது தெரு, அழகாபுரி பட்டணம் தெருவில் வாறுகால் கட்டுவதற்காக சாலை தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சாலை சீரமைக்கப் படாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகன போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், விரைவில் சாலை அமைக்கா விட்டால் போராட்டம் நடைபெறும் என அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பொதுமக்களுடன் இணைந்து நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் இல.கணேசன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் தி.அருணாச்சலம், முன்னாள் மாவட்ட OBC அணி துணைத் தலைவர் கே.ஏ.ஐயப்பன், மாவட்ட விவசாயி அணி செயலாளர் முத்துக்குமார், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் சுமு.முருகன், நகர பொருளாளர் முருகேசன், நகர செயலாளர் D.யோகராஜன், நகர விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரோமன் அழகுசுந்தரம், OBC அணி நகர தலைவர் சக்தி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலையை உடனடியாக சீரமைக்கா விட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஜே.அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி

By TN NEWS