Tue. Dec 16th, 2025



தென்காசி மாவட்டம், குற்றாலம் —
சபரிமலை சீசன் காரணமாக குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து வருகை தருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஊசி, பாசி, மணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் பாதையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அமைத்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், கோவில் பெயரில் ஒரு கடைக்கான கட்டிலுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வசூல் செய்யப்படுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் நடவடிக்கையை இன்று மேற்கொண்டனர்.

திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் ஒரு பரபரப்பு நிலை உருவானது. கடைதாரர்கள் மற்றும் பயணிகள் இடையே வார்த்தை தகராறும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகள், பக்தர்கள் நெரிசலை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை அவசியமானது என தெரிவித்தனர்.

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS