Tue. Dec 16th, 2025



குடியாத்தம், டிசம்பர் 12 —
குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வேலூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் தடுப்பு துறையைச் சேர்ந்த

துணை கண்காணிப்பாளர் திரு. சங்கர்,

காவல் ஆய்வாளர் திருமதி மைதிலி,

உதவி ஆய்வாளர் திரு. இளவரசன்

ஆகியோர் உட்பட ஏழு பேர் கொண்ட சிறப்பு குழு, RTO அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை விசாரணை செய்தது.

சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.75,000 தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் செந்தில் மற்றும் சில பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

சோதனை தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS