Tue. Dec 16th, 2025




கிராமப்புறங்களில் இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் செஞ்சி, திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்-செஞ்சி தொகுதி அவலூர் பேட்டையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இளம் கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற பேரவை கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகிலும் திண்டிவனம் தொகுதி மரக்காணம் ஒன்றியம் ஓமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.இதை அடுத்து செஞ்சி சட்டமன்ற தொகுதி அவலூர் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பத்மஜா தலைமையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத்,ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், கோட்ட உதவி செயற்பொறியாளர் முகமது யாசின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில்:

சிறு விளையாட்டு அரங்கம் ஒவ்வொன்றும் தலா ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது அரசு சார்பில் 2.50 கோடி ரூபாயும்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படவுள்ளது.

இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்துக்கான ஓடுதள பாதை, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஆக்கி, கோகோ உள்ளிட்ட விளையாட்டுக்கான பயிற்சி மைதானங்கள் உள்ளிட்ட வசதிகளும், மேலும் அரங்கத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.கிராமப்புறத்தில் உள்ள இளைஞர்கள் படித்து விளையாட்டுகளிலும் அவர்கள் பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் கே மாரி

By TN NEWS