Tue. Dec 16th, 2025

 


‘டித்வா’ புயலின் தாக்கத்தால் சென்னை முழுக்க பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஓரளவு மழை மட்டுமே பதிவானது. ஆனால் இன்று அதிகாலை முதலே வடசென்னையைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இடைவேளையில்லாமல் கனமழை பொழிந்து வருகிறது.

இதன் விளைவாக தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தேங்கிய முக்கிய இடங்கள்:

பெரம்பூர் நெடுஞ்சாலை

பி.பி சாலை

ஸ்டீபன்சன் சாலை

வியாசர்பாடி

மாதவரம்

மூலகடை

பெரியார் நகர் ஜீவா சந்திப்பு

மேல்பட்டி பொன்னப்பன் தெரு

பெரம்பூர் – பட்டாளம் பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கியதால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, முரசொலி மாறன் மேம்பாலம் அருகே சுமார் ஒரு அடி அளவுக்கு தண்ணீர் நின்றது.

மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி
தமிழ்நாடு டுடே

By TN NEWS