மதுரை – 26 நவம்பர்.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறும் மதுரை ரயில் நிலையத்தில், ரயில் இயக்க நேரங்கள் ஒட்டுமொத்தமாக மோதுவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நெருக்கடியை தீர்க்க தனி முனையம் (Separate Terminal) உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை ரயில்வே நிர்வாகத்திடம் வலுப்பெற்று வருகிறது.
காலை நேரத்தில் ரயில்கள் ‘தடுப்பூசி வரிசை’ போல…!
மதுரை–ராமேசுவரம், செங்கோட்டை, கோவை, போடி, சென்னை (வைகை) போன்ற ரயில்கள் பின்பு பின் 10–20 நிமிட இடைவெளியில் புறப்படுவதால், நடைமேடைகள் அனைத்தும் கூட்டநெரிசலால் நிரம்பியிருக்கின்றன.
பிட் லைன்கள் இல்லை – நடைமேடைகளில் நீண்ட நேர நிறுத்தம்:
டெல்லி நிஜாமுதீன்
புனலூர்–மதுரை
பாண்டியன் எக்ஸ்பிரஸ்
வைகை
மதுரை–பெங்களூரு வந்தே பாரத்
போன்ற முக்கிய ரயில்கள் கூட பிட் லைன் இல்லாததால் நடைமேடைகளில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் பிற ரயில்களுக்கு இடவசதி இல்லாமல் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
தேஜஸ் 3 மணி நேரம் நடைமேடையில் நிற்கும் நிலை!
மதுரை தேஜஸ் ரயில் மதிய 12 மணிக்கு வந்து மாலை 3.30 வரை நடைமேடை 1-ல் நிறுத்தப்படுவது பயணிகள் சுட்டிக்காட்டும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. பயணிகள் வலியுறுத்தல், கூடல்நகர் & குட்செட் பகுதியில் தனி முனையம் அவசியம்.
பயணிகள் சங்கங்கள் பரிந்துரைப்பது:
கூடல்நகர் நிலையத்திலிருந்து ராமேசுவரம், செங்கோட்டை வழி செல்லும் ரயில்களுக்கு காலி பெட்டிகளை அனுப்பலாம்.
மதுரை ஜங்ஷனின் வடக்கு பக்கம் (பழைய குட்செட் – பார்சல் ஆபிஸ் அருகே) உள்ள காலியிடத்தில் புதிய நடைமேடைகள் அமைத்து வடக்குப் புறப்படும் ரயில்களுக்கு தனிப்பட்ட முனையம் உருவாக்கலாம்.
இதனால்:
✔ நேரம் தாமதம் குறையும்
✔ பயணிகள் நெரிசல் கட்டுக்குள் வரும்
✔ ரயில்கள் காலத்துக்கு சரியாக இயங்கும்
ரயில்வே நிர்வாகம்: “பரிசீலிக்கப்படும்”
பயணிகள் அனுப்பிய மனுக்களுக்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மதுரை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிக இடநெருக்கடி ஏற்பட்டிருக்கலாம். புதிய முனைமைக்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும்.”
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
