Wed. Dec 17th, 2025



அரூர், நவம்பர் 26:
தருமபுரி கிழக்கு மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (26.11.2025) காலை அரூர் நகர திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கழகத் தலைமையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் வரவிருக்கும் செயல்திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

அரூர் நகர கழக செயலாளர் முல்லை ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், நகர துணை செயலாளர் கே. செல்வ தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை அமைப்பாளர்கள் பெ. கவாஸ்கர், சிவசக்கி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சசிக்குமார், தமிழ்முரசொலி, ஆகாஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. நவம்பர் 27 உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா:
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.


2. 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு:
அரூர் நகரத்தில் இளைஞர் வாக்காளர் பங்கேற்பை அதிகரித்து, கழக வேட்பாளர் வெற்றிக்கு ஒருங்கிணைந்த பணிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.


3. #Sir திட்டப்பணிகள்:
நகரில் நடைபெற்று வரும் #Sir திட்டப் பணிகளை 100% இலக்கில் நிறைவேற்ற அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


4. மண்டல மாநாட்டில் பங்கேற்பு:
திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டில் அரூர் நகரத்திலிருந்து அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

பசுபதி
தலைமை செய்தியாளர்

By TN NEWS