கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு;
நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது தமிழக அரசின் கடமை என, உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, பொது மக்களின் சொத்து பாதுகாப்பில் காவல்துறை பொறுப்பையும், விசாரணை தோல்வியடைந்தால் அரசின் மறுக்க முடியாத கடமையையும் வலியுறுத்துகிறது.
நீதிமன்றம் வழங்கிய மூன்று முக்கிய அறிவுறுத்தல்கள்;
1) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு — அரசே வழங்க வேண்டும்.
காவல்துறை உரிய விசாரணை நடத்திய பின்னரும்,
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படா விட்டாலும், அல்லது திருடப்பட்ட நகைகள்/சொத்துகள் மீட்கப்படாவிட்டாலும்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடை தமிழக அரசு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டது.
2) திறமையான சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்க வேண்டும்.
திருட்டு போன்ற சிக்கலான வழக்குகளை திறம்பட விசாரிப்பதற்காக,
அனுபவமுள்ள, விசாரணை நுணுக்கம் கொண்ட அதிகாரிகளை இணைத்து,
சிறப்பு காவல் பிரிவு (Special Police Unit) ஒன்றை அவசரமாக அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது கடினமான வழக்குகளின் விசாரணை தரத்தை மேம்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது.
3) 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளின் ஆய்வு…!
ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் உள்ள திருட்டு வழக்குகளை அனைத்தையும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் மூலமாக முழுமையாக பரிசீலனை செய்து, ஒவ்வொரு வழக்கின் நிலை பற்றியும் விரிவான அறிக்கை தயாரிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தீர்ப்பின் தாக்கம்: முக்கிய தீர்ப்பு…!
• திருட்டு வழக்குகளில் நீதி கிடைக்காத நிலையை மாற்றும்
• காவல்துறை விசாரணை பொறுப்பை வலுப்படுத்தும்
• பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நேரடியாக பரிகாரம் வழங்கும் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கும்
என்பதனால், மாநிலம் முழுவதும் சட்டம்–ஒழுங்கு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு டுடே
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
TNT அமல் ராஜ்
