Thu. Dec 18th, 2025

தருமபுரி, நவம்பர் 25:
தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேஷ்குமார், நாசர், ஹரிபிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், மண்டல மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 27 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் சி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்

ராஜீவ் காந்தி.

 

 

By TN NEWS