Fri. Dec 19th, 2025

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகமான பக்தர்கள் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நெல்லை, திருவண்ணாமலை சிறப்பு ரயில்:

• டிசம்பர் 3, நெல்லை நிலையத்தில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
• டிசம்பர் 4, திருவண்ணாமலை நிலையத்தில் இரவு 7:55 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் – வட்டப்பாதை சிறப்பு ரயில்கள்:

டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில்,
சென்னை சென்ட்ரலில் இருந்து வட்டப்பாதை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பாதை:
சென்னை சென்ட்ரல் → அரக்கோணம் → காட்பாடி → திருவண்ணாமலை → விழுப்புரம் → தாம்பரம்

விழுப்புரம், திருவண்ணாமலை சிறப்பு ரயில்:

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி, கீழ்க்கண்ட தேதிகளில் காலை 10:10 மணிக்கு ரயில் புறப்படும்:

• நவம்பர் 30
• டிசம்பர் 3
• டிசம்பர் 4
• டிசம்பர் 5

V.ஜெய்ஷங்கர்

தமிழ்நாடு டுடே மக்கள் தொடர்பு அதிகாரி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

By TN NEWS