வெறி நாய் தாக்குதலில் 2 பசுக்கள் உயிரிழப்பு – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
மோளையானூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெறிபிடித்த நாய்கள் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து கால்நடைகளை கடிக்கும் தொடர் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கிராமத்தில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இன்று மட்டும் இரண்டு பசுக்கள் நாய் தாக்குதலால் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக கிராம மக்கள் பெரும் பொருளாதார இழப்பையும் மனஅழுத்தத்தையும் சந்தித்து வருகின்றனர்.
அத்துடன், அருகிலுள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் தினமும் பயமுடன் கால்நடைகளை மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அவசரமாக கீழ்கண்ட நடவடிக்கைகளை கோரிக்கை விடுத்துள்ளனர்:
1️⃣ வெறிபிடித்த நாய்களை உடனடியாக பிடித்து கட்டுப்படுத்துதல்
2️⃣ பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை வைத்தியர்கள் மூலம் தடுப்பூசி மற்றும் அவசர சிகிச்சை வழங்குதல்
3️⃣ நாய் குருத்துநோய் பரவலைத் தடுக்கும் முன் நடவடிக்கைகள் எடுப்பது.
4️⃣ உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குதல்
கிராம மக்கள் வேண்டுகோள்:
“கிராமங்களில் அச்சம் அதிகரித்துள்ளது… உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!”
மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி

