Mon. Dec 22nd, 2025

22.11.2025 – சென்னை அயனாவரம்


அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில் டாஸ்மார்க் கடை மூட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சாலை சந்திப்பில், மருத்துவமனை வளாகம் மற்றும் பள்ளி வளாகத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் கடை எண் 317– டாஸ்மார்க் மளிகைக் கடையை மூடுவதற்கான கோரிக்கையுடன் இன்று (22.11.2025) பொதுமக்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்வி நிறுவனமும் மருத்துவ வசதிகளும் உள்ள பகுதியில் மது கடை இயங்குவது, மாணவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக மற்றும் மக்கள் இயக்கங்கள் கலந்து கொண்டன. குறிப்பாக:

டிஒய்எஃப்ஐ (DYFI)

பெண்கள் ஜனநாயக முன்னேற்றம் அமைப்பு

அப்பகுதி பொதுமக்கள்


என பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, கடையை உடனடியாக மாற்றவோ அல்லது மூடவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் காவல்துறையினர் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் அமைதியாக கலைக்கப்பட்டது.



தமிழ்நாடு டுடே – சென்னை மாவட்டம்
செய்தியாளர் : எம். யாசர் அலி

By TN NEWS