Thu. Nov 20th, 2025



தென்காசி நகர மக்களின் நீண்டநாள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், தாமிரபரணி குடிநீர்திட்டம் (அலகு–II) ரூ.69.45 கோடி மதிப்பில் தமிழ்நாடு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்குத் தேவையான நிலம் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டது.

இதனை அறிந்த தென்காசி நகர்மன்ற தலைவர் R. சாதிக் அவர்களின் தாயாரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான ரபீக்காள் (EX.M.C.) அவர்கள், தன்னுடைய பொட்டல்புதூரிலுள்ள ரூ.25 லட்சம் மதிப்புடைய 6 சென்ட் தனியார் நிலத்தை நகராட்சிக்கு முழுக்க முழுக்க தானமாக வழங்கியுள்ளார். மக்களின் நலனை முன்னிறுத்திய இந்த பெருந்தன்மையான செயல், தென்காசி முழுவதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இந்திய விடுதலை வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்திற்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புரட்சிப்போராட்டத்திற்கும் நிதி வழங்கிய வள்ளல் ஹபீப் முஹம்மது, பக்கீர் முஹம்மது, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்காக நிலம் தந்த ஹாஜி கருத்தராவுத்தர், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை உருவாக்க நிதி வழங்கிய ஹாஜி வாப்பு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிக்காக 300 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய பெட்டைகுளம் காதர்மீரா சாஹிப் போன்றவர்களின் வரலாற்றுப் பெருங்கொடைச் செயலை நினைவுபடுத்தும் வகையில், இன்றும் இஸ்லாமிய சமூகத்தின் மக்கள் நலப்பணி தொடர்கிறது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

இந்த கொடைச் செயலை உயர்ந்த மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக மதித்து, SDPI கட்சி மாவட்ட தலைவர் K. திவான் ஒலி அவர்கள், ரபீக்காள் அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை வழங்குவது: TNT Amalraj
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர், தமிழ்நாடு டுடே

By TN NEWS