Mon. Jan 12th, 2026

விழுப்புரம் | ஜனவரி 09

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், மாணவர்களிடையே நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோக்கில், இன்று (09.01.2026) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை,
➡️ கல்லூரி பாலின உளவியல் கண்காணிப்புக் குழு,
➡️ விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம்,
➡️ விழுப்புரம் மாவட்ட காவல் குற்றப் பிரிவு
ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன.

வரவேற்புரை:

பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் கு. கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில்,
“தற்காலச் சூழலில் மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மன ரீதியான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்” என வலியுறுத்தினார்.

தலைமை உரை:

கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சிவக்குமார் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாணவர்களின் ஒழுக்கமே சமூகத்தின் வலிமை என்றும்,
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கிய கருவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரைகள்:

தொடர்ந்து நடைபெற்ற அமர்வில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர்.

முனைவர் ஜெ. ஸ்ரீதேவி,
ஆங்கிலத் துறைத் தலைவர்,
சமூகத்தில் நிலவும் பாலின சமத்துவம் மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்து விளக்கினார்.

முனைவர் கோ. குணசேகர்,
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்,
சமூகப் பணிகளில் மாணவர்களின் பங்கு மற்றும் விழிப்புணர்வின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

கீதா, காவல் ஆய்வாளர்,

பாலியல் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது,சட்ட ரீதியான பாதுகாப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

சிறப்பு விருந்தினர் உரைகள்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. A.V. இளமுருகன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,
இணைய வழி குற்றங்கள் (Cyber Crimes) மற்றும்பாலியல் சீண்டல்களுக்கு எதிராக காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும்,விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த நீதிபதியுமான திரு. C. ஜெயசந்திரன் உரையாற்றினார்.அவர் பேசுகையில்,“சட்ட அறிவு என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கவசம் போன்றது” என்றும்,POCSO உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டங்கள்,   பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக,
கணினி அறிவியல் துறைத் தலைவர் திருமதி பாரதி நன்றியுரை ஆற்றினார்.

இந்த கருத்தரங்கில்,
பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் : கே. மாரி

By TN NEWS