Sun. Jan 11th, 2026



இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடைப் பிரிவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு ஈரோட்டில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்து சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பள்ளிக் கல்வி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவி சிந்து, மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்தச் சிறப்பான சாதனையைத் தொடர்ந்து, மாணவி சிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) கார்த்திகா அவர்களை நேரில் சந்தித்து, வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் பாரதிதாசன், பயிற்சியாளர் சசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS