அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராக
அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு
2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் .
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central Trade Unions), தேசிய மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (NCCOEEE),
மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM)
ஆகிய அமைப்புகள் இணைந்து
தேசிய மின்சார தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (NCCOEEE), மத்தியதொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) ஆகியவை முன்னரே எச்சரித்திருந்தபடியே, மத்திய அரசு “இந்திய மாற்றத்திற்கான அணு ஆற்றலின் நிலைத்த பயன்பாடு மற்றும் முன்னேற்றம்” (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India – SHANTI) என்ற 2025 ஆம் ஆண்டின் அணு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா, இந்தியா பல ஆண்டுகளாக மிகுந்த கவனத்துடன் உருவாக்கி வைத்திருந்த அணு பாதுகாப்பு மற்றும் பொறுப்புக் கூறும் (accountability) கட்டமைப்பை முற்றாக சிதைக்கிறது. மேலும், மிகுந்த அபாயம் கொண்ட இந்த அணு ஆற்றல் துறையை பெரும் அளவிலான தனியார் மற்றும் அந்நிய முதலீட்டுக்கு திறந்து விடுகிறது.
இதுவரை நடைமுறையில் இருந்த அணு ஆற்றல் சட்டம் (Atomic Energy Act), அதன் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் பேரழிவுச் சாத்தியங்களை கருத்தில் கொண்டு, சிவில் அணு நடவடிக்கைகளில் கடுமையான பொது கட்டுப்பாட்டை உறுதி செய்துவந்தது. ஆனால் SHANTI மசோதா, இதை மாற்றி, லாப நோக்கத்தைக் கொண்ட உரிமம் வழங்கும் (licensing) முறையை கொண்டு வருகிறது. இதன் மூலம், அணு ஆற்றல் மதிப்பு சங்கிலியின் (nuclear value chain) முக்கியப் பகுதிகள் தனியார் நிறுவனங்களுக்கு திறக்கப்படுகின்றன.
இது, அணு செயல்பாடுகளின் தனியார் மயமாக்கலுக்கான தீர்மானகரமான நகர்வாகும். அதே நேரத்தில், அணு அபாயங்களின் முழுப் பாரத்தையும் மக்கள் மற்றும் நாட்டின் மீது சுமத்தும் நடவடிக்கையாகும்.
சிவில் அணு சேத பொறுப்பு சட்டம் (CLND Act) ரத்து செய்யப்படுவதன் மூலம், அணு உலை வழங்குநர்களிடமிருந்து (reactor suppliers) இழப்பீடு கோரும் இயக்குநரின் சட்டப்பூர்வ உரிமை நீக்கப்படுகிறது. இதனால், குறைபாடுள்ள வடிவமைப்பு அல்லது உபகரணங்களுக்கான பொறுப்பிலிருந்து தனியார் உற்பத்தியாளர்கள் முழுமையாக காக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக, அணு விபத்துகளின் நிதிச் சுமை, லாபம் ஈட்டும் நிறுவனங்களிடமிருந்து அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசுக்கும் மாற்றப்படுகிறது.
CLND சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, வழங்குநர் பொறுப்பு காரணமாக முதலீடு செய்ய மறுத்துவந்த பன்னாட்டு அணு உலை நிறுவனங்கள், இந்தியா சட்டத்தை மாற்ற வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தன. அமெரிக்கா, இதற்காக மீண்டும் மீண்டும் அழுத்தம் தந்தது. இப்போது, மோடி அரசு அந்த அழுத்தத்திற்கு முற்றாக சரணடைந்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் இந்தியா–அமெரிக்கா சிவில் அணு ஒப்பந்தத்தின் பின்னணியில், வெளிநாட்டு வழங்குநர்களை சமாளிக்க அரசியல் சமரசமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு விபத்துக்கு ரூ.1,500 கோடி என்ற இழப்பீட்டு வரம்பும், அரசால் கூடுதலாக வழங்கப்படக்கூடிய மற்றொரு ரூ.1,500 கோடியும், ஏற்கனவே மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன. புகுஷிமா போன்ற பேரழிவுகள் (200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் செலவு) நடந்த பிறகும், சர்வதேச அணு வழங்குநர்கள், முழு பொறுப்பிலிருந்து தப்பிக்க, இழப்பீட்டை குறுகிய கால மற்றும் தொகை வரம்புக்குள் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்த அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராக,
2025 டிசம்பர் 23 அன்று, அனைத்து பணியிடங்களிலும் மற்றும் கிராமங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு
NCCOEEE, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் SKMதங்களின் அனைத்து அமைப்புகளையும் அழைக்கின்றன.
மின்சாரத் துறையின் தனியார்மயமாக்கலுக்கும்,
மின்சார (திருத்த) மசோதா, 2025 க்கும் எதிராக,
NCCOEEE, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் SKM ஆகியவை இணைந்து,2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், நாடு முழுவதும் பெரும் மாநாடுகள், பேரணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தேசியப் பிரச்சாரத்தை நடத்தவுள்ளன.
இந்தப் பிரச்சாரம், SHANTI மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடுதலாக, பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறது.
மின்சார (திருத்த) மசோதா, 2025-ஐ உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அணு ஆற்றல் சட்டம் மற்றும் சிவில் அணு சேத பொறுப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
முன்பணம் செலுத்தும் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து தனியார்மயமாக்கல் / ஃபிராஞ்சைஸ் மாடல்களையும் (சண்டிகர், டெல்லி, ஒடிசா) வாபஸ் பெற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் PVVNL மற்றும் DVVNL நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும். நிகர மானியம் (cross-subsidy) மற்றும் பொதுச் சேவை கடமை (universal service obligation) தொடர வேண்டும்; விவசாயிகள் மற்றும் அனைத்து நுகர்வோருக்கும் மின்சார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் மின்சார கட்டணங்களை குறைக்கத் தெளிவான, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.SHANTI மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். அத்துடன், இயக்குநரின் recourse உரிமை உட்பட கடுமையான பொறுப்புக் கூறும் விதிகளை மீண்டும் கொண்டுவர வேண்டும், உண்மையான, சுயாதீன அணு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்
சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டும். அணு நடவடிக்கைகளில் அந்நிய பங்கு மற்றும் மூலோபாய அம்சங்கள் மீது தெளிவான பாராளுமன்றக் கட்டுப்பாடு உறுதி செய்ய வேண்டும் என கோருகிறோம்.
NCCOEE ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM)
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Joint Platform of CTUs)
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.
