Fri. Dec 19th, 2025


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் மண்சாலையை தார் சாலையாக மாற்றும் பணி, திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட போட்டி மோதலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாதூர் ஊராட்சியில் நடைபெற்று வந்த சாலை பணிகள் முடங்கியதால், அந்தச் சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக, அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை வயல்களிலிருந்து கொண்டு வர முடியாமல் விவசாயிகள் கடும் அவதியில் உள்ளனர்.

சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, விவசாயிகளின் வேதனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS