Wed. Dec 17th, 2025



தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தீயணைப்பு துறையினரின் ஆய்வாளர் மற்றும் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு,

தீ விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது,

பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது,

அவசர சூழ்நிலைகளில் வழங்க வேண்டிய முதலுதவி
என விரிவாக விளக்கினர்.

இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணி அவர்கள் தலைமையேற்றார்.
NSS ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவநதி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை (நல்லாசிரியர்) நன்றி உரையாற்றினார்.

வே. பசுபதி
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி

By TN NEWS