
பொதுமக்கள் அவதி – தனியான போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றம் அடைந்து வரும் சங்கராபுரம் நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் டிராபிக் நெரிசல் உருவாகி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அனுபவித்து வருகின்றனர்.
40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி சேரும் நகரம்:
சங்கராபுரத்தை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் நகரத்துக்கு வந்து செல்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வருவோர் சாலையின் இருபுறமும் கட்டுப்பாடில்லாமல் வாகனங்களை நிறுத்துவது முக்கிய பிரச்சினையாக உள்ளது.
நெரிசல் அதிகமாகும் பகுதிகள்
சங்கராபுரம் கடை வீதி
பூட்டை ரோடு
கள்ளக்குறிச்சி மெயின் ரோடு
இந்த பகுதிகளில் போதிய போக்குவரத்து கட்டுப்பாடு இல்லாததால் தினசரி டிராபிக் ஜாம் வழக்கமாகியிருக்கிறது.
4 ஆண்டுகளாக போக்குவரத்து போலீசார் இல்லாத நிலை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகி நான்கு ஆண்டுகள் கடந்தும்,
சங்கராபுரம் போன்ற பெரிய நகரத்திற்கு இதுவரை தனியான போக்குவரத்து போலீஸ் பிரிவு / அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
பொது மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை:
சங்கராபுரத்தில் தனியாக போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்
வாகன நிறுத்தம் தொடர்பாக தெளிவான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
பீக் நேரங்களில் போக்குவரத்து ரோந்து மற்றும் கண்காணிப்பு அவசியம்
விளக்கம் / செய்தி:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்
