Tue. Dec 16th, 2025

ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள நல்லாபாளையம் ஊராட்சி, காணை ஊராட்சி ஒன்றியத்திலிருந்து புதியதாக உருவாக்கப்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து கிராம மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தூரம் காரணமாக மக்கள் எதிர்ப்பு:

நல்லாபாளையம் இருந்து கஞ்சனூர் வரை 45 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இத்தகைய தூரத்திலுள்ள ஒன்றியத்தில் நிர்வாக வசதி மாற்றப்படுவது மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், வெங்கமூர், செம்மேடு, சித்தேரி, எழுசெம்பொன், சிறுவாலை போன்ற கஞ்சனூர் அருகில் அமைந்துள்ள (1–5 கி.மீ.) ஊர்களை சேர்க்காமல், தூரத்தில் உள்ள நல்லாபாளையத்தை மட்டும் இணைத்திருப்பது நிர்வாக ரீதியாக பொருத்தமற்றது என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்:

நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுக்க முனைந்ததால் இருபுறமும் வாக்குவாதம் நிலவியது.

100 பேர் கைது:

பின்னர், நிலைமை அதிகரித்ததை அடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து, பேருந்தில் ஏற்றி அருகிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100 பேர் எனத் தெரிவிக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம்
வி. ஜெய்சங்கர்
தமிழ் நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS