
விழுப்புரம் மாவட்டம் – மைலம் காவல் நிலைய அதிரடி நடவடிக்கை:
விழுப்புரம் மாவட்டம் மைலம் காவல் நிலைய போலீசார் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இளைஞரை அதிரடியாக கைது செய்தனர்.
குற்றச்செயல் விவரம்:
மைலம் அருகே சிங்கனூரை சேர்ந்த ஒரு பெண், “பாரத் திருமண தகவல் மையம்” என்பதை நம்பி இணையத்தில் வரன் தேடியுள்ளார்.
அதில் உரிமையாளராக இருந்த திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, சென்னீர்குப்பம் JJ நகரை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அருண்மொழி (36) என்பவர் தன்னை வரனாக காட்டி,
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,
17 சவரன் நகை, ₹25,000 பணம், ஒரு இருசக்கர வாகனம்,Apple மொபைல் போன் வேறுபடியாக வாங்கிக் கொண்டு பெண்ணை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை நடவடிக்கை:
புகாரின் பேரில்,விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. சரவணன், IPS அவர்கள் உத்தரவின் படி, உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
விசாரணையில், அருண்மொழி பல போலி “widow marriage info”, “doctor/teacher/government officer” என்ற போலியான biodata களை பயன்படுத்தி பல பெண்களிடம் நெருக்கம் கொள்ள,
திருமணம் செய்கிறேன் என்று நம்ப வைத்து மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
கைது நடவடிக்கை:
காவல்துறை அவரை தேடி வந்த நிலையில்,
திண்டிவனம் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த அருண்மொழியை போலீசார் அடையாளம் கண்டு நேற்று கைது செய்தனர்.
எதிரி மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,
நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
விளக்கம் / தகவல்:
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம்
