


தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் :
பொ.மல்லாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாதம்மாள் (55) என்பவர், கடந்த 55 ஆண்டுகளாக ஸ்ரீ பொன் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அந்தக் கடையின் முன்பு மண்ணைக் கொட்டி வழித்தடத்தை முழுமையாக அடைத்ததுடன், கடந்த 6 மாதங்களாக வாடகை பெறாமல் கடையை காலி செய்ய வற்புறுத்தி, சில அடியாட்கள் மூலம் மிரட்டுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்தச் செயல்களில் அன்பில் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
👉 45 ஆண்டுகளாக தொடரும் புகார் வரலாறு?
அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டுப்படி,கடந்த 45 ஆண்டுகளாக அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருவதாகவும்,பொது இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்முத்து மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ அருணாச்சலரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின்
நவபாசாண சிலை,
ஐம்பொன் சிலைகள்,
தங்கம், வெள்ளி, பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் முறைகேடாக கையாளப்பட்டதாகவும் கடும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும், சாதிய அடிப்படையிலான தீண்டாமை நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
👉 அரசு அறிவிப்பை கிழித்த சம்பவம் வைரல்:
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிழித்துவிட்டு பொதுமக்களை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதன் மூலம் அரசு அதிகாரிகளுக்கே சவால் விடும் நபராக அவர் செயல்படுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
👉 நீதிமன்றம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துவரும் நிலையில்,
நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொ.மல்லாபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டல செய்தியாளர்,
ராஜீவ் காந்தி
