டிசம்பர் 8
வேலூர் மாவட்டம், குடியாத்தம் :-
குடியாத்தம் நகரில் நடைபெற்று வரும் நகர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது,
பூத் எண்கள் : 33, 34, 35, 36, 37, 44, 105, 106, 107, 108 ஆகிய பகுதிகளில் SIR படிவம் பூர்த்தி செய்யும் பணிகள் சரிவர நடைபெறுகின்றதா என்பதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில்,
குடியாத்தம் வட்டாட்சியர் பழனி,நகர செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் பூத் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட,வேலூர் புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜனாப் SI அன்வர் பாஷா,Ex. MC மாவட்ட பிரதிநிதி M.K. சலீம்,வார்டு செயலாளர்கள் S. பிலால், டிஷ் மோகன், N. பஜலுல்லா, M. ஆனந்தன், ஆட்டோ இர்ஷாத், அனுபா ஆகியோர் மற்றும் BLO அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படிவம் பூர்த்தி செய்து வருவதாகவும், பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
