தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பையாபுரம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்புமுகாம் ஒன்று நடைபெற்றது.
இந்த முகாமில் கொலைகுலையனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சீதா பாலமுருகன் தலைமையிலான குழுவில், உதவி இயக்குநர் பிரேமா, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமநாதன், துணைத் தலைவர் பொன்மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி உறுப்பினர்களாக ஜெயலட்சுமி, முத்துலட்சுமி, ராஜேந்திரன், உஷாராணி, செல்வம் (மாடசாமி), தங்ககாளி, முத்துமாரி, நட்சத்திரம், கவுன்சிலர் ரோஜா முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவப் பிரிவில் கலந்துகொண்ட கலை கதிரவன், துணை சேர்மன் ஜவேந்திரன், சேர்மன் அருணாசலம், கிராம நிர்வாக அலுவலர் பாலு, ஒன்றியச் செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் நகரத் தலைவர் சுப்பம்மாள் உள்ளிட்ட பலர் முகாமில் செயலாற்றினர்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.என். பழனிநாடார் மற்றும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலனும் கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை ஏற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
முகாமில் சொத்து வரி, குடிநீர் வசதி, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனைப் பட்டா, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திடம் மனுவாக வழங்கப்பட்டன. அதிகாரிகள், குடிமக்கள் மனுக்கள் விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஜோ.அமல்ராஜ்
தென்காசி மாவட்டம்
முதன்மை செய்தியாளர்.