Tue. Jul 22nd, 2025



திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில், அதன் தொன்மை மற்றும் அபாரமான செல்வச் சேர்க்கைகளால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது.

இந்த கோவிலில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் அனந்த பத்மநாபசுவாமி சிலை, அதிநவீன கருவிகளால் கூட மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு விலைமதிப்பற்றது என விஞ்ஞானிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வச்சேர்க்கை:

7,800 கிலோ தூய தங்கம்

7,80,000 வைரங்கள்

780 கேரட் வைரங்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட அலங்காரங்கள்


இந்த செல்வத்தின் மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகளில் இருப்பதாக கூறப்படுகின்றது.

மதிப்பீடு செய்ய முடியாத கோவில் செல்வம்!

இந்தச் சிலையின் மதிப்பீட்டை கணிக்க பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நிபுணர் குழு முயன்றபோதும், அதனை கணக்கிட முடியாது என்று அதிர்ச்சி அடைந்து திரும்பி சென்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெய்வீக சக்தியும், ஆன்மீக வளமும் நிறைந்த இந்த சிலையை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. நேரில் தரிசிக்க முடியாதவர்கள், காணொளி மூலம் கூட இதனை கண்டால் பலன் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இணை ஆசிரியர் – Dr.சேக் முகைதீன்

By TN NEWS