Tue. Jul 22nd, 2025

திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் நிகழ்ந்த காய வழக்கு தொடர்பான பத்திரிக்கை குறிப்பு

திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அரவிந்தன்(25), அவரது தந்தை முருகேசன்(53) மற்றும் தாய் சுமதி ஆகியோர் 23.03.25ம் தேதி 00.45 மணியளவில் அவரது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, அவர்களது வீட்டிற்கு அருகே பூட்டபட்டிருந்த ரேவதி என்பவரின் அழகு மலையான் அரிசி கடையின் கதவினை பாலாஜி(22), ஆகாஷ்(27) மற்றும் அவரது நண்பர்கள் அக்கடையின் வாசலில் அமர்ந்துகொண்டு தட்டிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மேற்கண்ட சுமதி ஏன் இவ்வாறு கடையின் கதவை தட்டி கொண்டு இருக்கிறீர்கள் என கேட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறியதை தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக 23.03.2025 அன்று மாலை சுமார் 17.15 மணிக்கு 1.பாலாஜி (எ) முத்துபாலாஜி(22), 2.ஆகாஷ்(27), 3.கருத்த பாண்டியன் (எ) ஆதி(19), 4.ஸ்டீபன்ராஜ்(19), 5.லலித்குமார்(20) ஆகியோர் சம்பவ இடமான அரவிந்தன் வீட்டருகே வந்து அரவிந்தன் மற்றும் அவரது தந்தை முருகேசனிடம் மேற்கண்ட ஐந்து நபர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், அதில் மேற்கண்ட ஆகாஷ் என்பவர் கையில் இருந்தக்  கத்தியைக்கொண்டு இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதன்படி காயமடைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட ஐந்து  எதிரிகள் மீதும் வீரபாண்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்று இரவே ஐந்து நபர்களும்  கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டுடே செய்தியாளர் – சரவணக்குமார்.

By TN NEWS