பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
திருச்சி, மார்ச் 24:
திருச்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் சன் நியூஸ் செய்தியாளர் மற்றும் தினகரன் புகைப்படக் கலைஞர் மீது பாஜகவினரால் நடத்தப்பட்ட தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது என எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பொது நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறை பயன்படுத்துவது அநாகரிகமான செயலாகும். இது பாஜகவினரின் அடக்குமுறையையும், சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தையே அச்சுறுத்துகின்றன.”
“ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பு. எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தலைமை செய்தியாளர் தமிழ்நாடு டுடே
தென்காசி மாவட்டம் – அமல்ராஜ்.