Tue. Jul 22nd, 2025

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில் ஜான் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தினமும் ஒரு படுகொலை நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்றும், காவல் நிலையங்கள் உண்மையில் செயல்படுகின்றனவா, அல்லது திமுகவினர் பூட்டிவிட்டார்களா என்பது தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்ச்சியாக சட்டம், ஒழுங்கு குறைகின்றது என்பதற்கான ஆதாரமாகவே இந்த சம்பவங்கள் இருக்கின்றன என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

— நமது செய்தியாளர்

By TN NEWS