திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் பணம் வைத்து சூதாட்டம் – 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருகல்பட்டி பகுதியில், பணம் வைத்து சூதாடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மனோகரன், தனபால், கிஷோர் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 52 சீட்டுகள் மற்றும் ரூ.27,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்கள்மீது சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
— நமது செய்தியாளர், சரவணகுமார், திருப்பூர் மாவட்டம்
