Tue. Jul 22nd, 2025



திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், நத்தக்காடையூர் குற்றை பேருந்து நிலையம் அருகில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 19.03.2025 அன்று மதியம் 2:00 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

காங்கேயம் உதவி ஆய்வாளர் அர்ஜீனன் தலைமையிலான காவலர்கள் குறித்த இடத்தில் கண்காணிப்பில் இருந்த போது, EGO CAR (TN 33 BW 6324) மற்றும் RACER CAR (TN 33 Q 2000) என இரு வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:

1. விக்னேஷ்வரன் (34), தந்தை: ஆண்டவன் – லால்பகதூர் சாஸ்திரி வீதி, சிவகிரி, ஈரோடு மாவட்டம்.


2. தங்கவேல் (51), தந்தை: கருப்பணன் நாடார் – மருதுரையான்வலசு, பல்லடம்.



இவர்களது வாகனங்களை சோதனை செய்த போது, சட்ட விரோதமாக 44 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, 44 கிலோ குட்கா மற்றும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைதான இருவரும் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட உள்ளனர்.

— நமது செய்தியாளர்
சரவணகுமார் – திருப்பூர் மாவட்டம்.

By TN NEWS