உசிலம்பட்டி 18.03.2025
*உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி தேவி., கர்ப்ப பையில் உருவான கட்டியை அகற்ற உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 20 தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.,
இந்நிலையில் இன்று 12:30 மணியளவில் கர்ப்ப பையில் இருந்த கட்டியை அரசு மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.,
அறுவை சிகிச்சை முடிந்து ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்ட தேவி மூன்று முறை வாந்தி எடுத்தாகவும், இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.,
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பரிதாபமாக உயிரிழந்தாக தெரிவித்த சூழலில் தகவலறிந்து வந்த உறவினர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டு பகுதியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் தேவியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பிணவறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்

