Tue. Jul 22nd, 2025



செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, வட்டார அலுவலர் விரைவில் குப்பை கொட்டும் இடம் மாற்றப்படும் என உறுதியளித்திருந்தாலும், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால், மாவட்ட ஆட்சியரிடம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய தலைவர் N. ஜோதிலிங்கம் தலைமையில் மேல் முறையீடு புகார் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 20 நாட்களுக்குள் குப்பைகள் அகற்றப்படாவிட்டால், பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலக வளாகத்திற்குள் குப்பைகளை கொட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சென்னை கிழக்கு மாவட்ட பரங்கிமலை தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் N. ஜோதிலிங்கம் எச்சரித்துள்ளார்.

ஆர்.தியாகராஜன்தமிழ்நாடு டுடே
PRO – சோழிங்கநல்லூர்சென்னை.

By TN NEWS