Tue. Jul 22nd, 2025

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.*

சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி மலை வனச்சரக பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தீயணைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும், காய்ந்த புற்கள் அதிகமாக தென்படுவதாலும் தீ, வேகமாக பரவி வருகிறது. சரக பணியாளர்கள் 15 பேரும் சிலர் உதவியுடன் முழுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம்.
தீ கட்டுக்குள் வரும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சம் வேண்டாம்.
தீ ஏற்பட காரணமான சமூக விரோதிகள் யாரென்று தெரியும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் தீ ஏற்படக்கூடிய பொருளை வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தீ ஏற்பட காரணமானவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மு.சேக்முகைதீன்

By TN NEWS