தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து தடம் எண் 10B, 317 ஆகிய பேருந்துகள் சென்று வருகிறது.
இப்பேருந்து வசதியினை எங்கள் ஊரினைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வயதானோர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட பேருந்து சேவையானது எங்கள் ஊரின் விலக்கில் மட்டும் நிறுத்தம் செய்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளை இறக்கிவிட்டு செல்கிறது. மேற்கண்ட பேருந்து சேவையானது எங்கள் ஊருக்கு வந்து செல்ல உத்திரவிடப்பட்ட பேருந்து சேவையாகும்.
எங்கள் ஊருக்கு வராத காரணத்தினால் வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பேருந்து சேவையினை எங்களது ஊரான மூர்த்தீஸ்வரம் ஊருக்குள் வந்து செல்ல *சங்கரன்கோவில் போக்குவரத்து கழக பணிமனை மேலாளருக்கு உத்தரவிட* கேட்டுக்கொள்கிறோம்.
([2/7, 3:57 PM] +91 97862 05566) ஜான் சிலம்பு என்ற பெயர் கொண்ட உள்ளூர் பொது நல சேவைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை சார்பில் கோரிக்கையாக முன் வைத்துள்ளார்கள். அரசின் கவனத்திற்கு சென்று மக்கள் பயனடையலாம் என்பது எங்கள் விருப்பம் எனவும் தெரிவித்தார்.
மூர்த்தீஸ்வரம் பேருந்து நிறுத்தம்:
