சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆகாஷ்வாணியின் தமிழ் செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். 1947-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றதை பற்றிய செய்தியை வாசித்த பெருமையும் இவருக்கே உரியது.
நாட்டின் ஊடக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த அவர், 1985 ஆம் ஆண்டு ஜனவரியில் தனது நீண்டசந்த ஊடகப் பயணத்தை முடித்து ஓய்வு பெற்றார். பின்பு, வயது மூப்பு காரணமாக, இன்று சென்னையில் மரணமடைந்தார்.
வெங்கட்ராமனின் மறைவு ஊடகவியலாளர்கள், வானொலி மற்றும் பலரின் இரங்கல்களை மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது “ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது” என தொடங்கிய தெளிவான குரல், ஒலியுலகின் பொற்கால நினைவாகவே எஞ்சும்.
(ஆதாரம்: ஆகாஷ்வாணி தமிழ் செய்திகள்)
சேக் முகைதீன்