நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள் திரும்ப அனுப்பப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து வந்த பல்வேறு புகார்கள் அடிப்படையில்,
(23.01.25) நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் நெல்லை மாவட்ட பொது நல அமைப்பு, அகில பாரதிய கிரக பஞ்சாயத்து, அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து டிக்கெட் கவுண்டரில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரித்த போது முதலில் முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்தாலும் இறுதியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலிடத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கான வாய்மொழி உத்தரவை ஒப்புக் கொண்டனர்..
அரசின் அதிகாரப்பூர்வமான எந்த விதமான உத்தரவும் இல்லாமல் எந்த அடிப்படையில் பாமர மக்களுக்கு இடையூறு செய்யும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது என்று சம்பந்தப்பட்ட அதிகாரியான நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் கோட்ட வணிக ஆய்வாளர் ( Divisional commercial inspector) அவர்களை தொடர்பு கொண்டு முறையிட்ட போது அப்படி எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை ரொக்கமாக பணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் எங்கும் திரும்ப அனுப்பப்படுவதில்லை அப்படி அனுப்பினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்..
இந்த நடைமுறை நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மட்டும் இருக்கிறதா அல்லது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இருக்கிறதா என்பது குறித்து நமக்கு போதுமான தகவல்கள் இல்லாததால், தமிழகம் முழுவதும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் மக்கள் அதனை எதிர்த்து கேள்வி கேட்கவும், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் கோட்ட வணிக ஆய்வாளருக்கு புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது..
பொதுமக்கள் நன்மை கருதி இந்த தகவலை அனைத்து குழுக்களுக்கும் பகிர வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.. இது குறித்த தகவல்கள் அல்லது மேலதிக உதவிகளுக்கு தேவைப்பட்டால் அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் நிர்வாகிகளை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் செய்தியாளர் அமல் ராஜ்.


