Thu. Apr 23rd, 2026

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட பனைக்குளம் அருகிலுள்ள சோகையன் தோப்பு கிராமத்தில் தேர்தல் நாளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சோகையன் தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கிராம மக்களிடம் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வாக்களிப்பதை நிறுத்தி விட்டு சாலையில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கிராம மக்கள் திரளாக சாலையில் அமர்ந்ததால், வாக்குப்பதிவு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS