2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆனைகுளம், கண்ணநல்லூர், கோவன்குளம் ஆகிய மூன்று பஞ்சாயத்துகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள் மற்றும் பணிகளை, திமுக ஒன்றிய செயலாளர் திரு. அலெக்ஸ் அப்பாவு அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் திமுக கழக பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து, வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், வரிசை ஒழுங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை பரிசோதித்து, பணிகள் சீராக நடைபெறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும், வாக்காளர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களது வாக்குரிமையைச் செலுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆய்வு நடவடிக்கை, தேர்தல் செயல்முறையை சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்க உதவும் வகையில் அமைந்தது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

