Thu. Mar 26th, 2026

குடியாத்தம், மார்ச் 25:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன் மற்றும் பெண் காவலர் இந்துமதி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அண்ணா நகர், பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சதீஷ்குமார் (41) என்பவர் அனுமதியின்றி Air Gun துப்பாக்கியுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரை குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா

By TN NEWS