குடியாத்தம், மார்ச் 25:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46வது சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
நேற்று இரவு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
மொத்தம் 319 வாக்குச்சாவடிகளுக்காக 382 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 414 வி.வி.பேட் (VVPAT) இயந்திரங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி, உதவி தேர்தல் அலுவலர் சந்தோஷ், துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். அதில்:
அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே.கே.என். பழனி
தி.மு.க. நகர செயலாளர் சௌந்தர்ராஜன் கோவிந்தராஜ்
பா.ஜ.க. சார்பில் ஸ்ரீகாந்த் சுகுமார்
காங்கிரஸ் சார்பில் நவீன் குமார்
புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ்
தே.மு.தி.க. நகர செயலாளர் செல்வகுமார்
வடக்கு ஒன்றிய செயலாளர் ஹரிபாபு
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துரை செல்வம், காத்தவராயன் உள்ளிட்டோர்
பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து உறுதிப்படுத்தினர். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா