பத்திரிக்கை வெளியீடு…!
சென்னை, மார்ச் 24:
பதிவு நடைமுறையில் ஏற்பட்டுள்ள சட்ட விளக்க முரண்பாடு காரணமாக, பகுதி மனைகள் பதிவு செய்ய மறுக்கப்படுவது பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடலூர் பதிவு மண்டலத்திற்குட்பட்ட விருத்தாச்சலம் பதிவு மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றாவது இணை சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட எருமனூர் கிராமத்தில், புல எண் 393/6-இல் அமைந்த நிலம் “பியரல் சிட்டி” என்ற பெயரில் DTCP அனுமதியுடன் 52 வீட்டு மனைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த மனைத் திட்டத்தில் இருந்து 18 பகுதி மனைகளுக்கான உரிமைகள், சட்டப்படி பெறப்பட்ட பொது அதிகார ஆவணத்தின் (Power of Attorney) அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பொது அதிகார ஆவணத்தின் அசல் பிரதியும் இருப்பினும், முதல் நில உரிமையாளரின் அசல் ஆவணம் இல்லாத காரணத்தால் பதிவு செய்ய முடியாது என தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதிவு மறுப்பிற்கான காரணமாக, ஜனவரி 2026 முதல் அமலில் உள்ள பதிவு சட்டப்பிரிவு 34C மேற்கோள் காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பதிவு சட்டப்பிரிவு 55A அடிப்படையில், பகுதி மனைகளுக்கான பொது அதிகார ஆவணத்தின் அசல் இருந்தால் பதிவு செய்யலாம் என பதிவுத்துறை முன்பே தெளிவுரை சுற்றறிக்கை வெளியிட்டிருந்தும், அதனை பின்பற்றாமல் பதிவு மறுப்பது சட்ட மற்றும் நிர்வாக முரண்பாடாகும் என கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலைமையால்:
முன்பதிவு செய்த பொதுமக்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்
வங்கிக் கடன் பெற்றவர்கள் பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்
வங்கிகள் உடனடி பதிவு கோரி அழுத்தம் தருகின்றன
பொது அதிகாரம் பெற்றவர்களின் வணிகமும் நற்பெயரும் பாதிக்கப்படுகின்றன
இந்த பிரச்சினை தொடர்பாக உரிய அலுவலகங்களில் நேரில் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு பதிவுத்துறை உடனடியாக தலையிட்டு:
பதிவு சட்டப்பிரிவு 55A அடிப்படையில் பகுதி மனைகளின் பதிவை அனுமதிக்கவும்.
34C மற்றும் 55A தொடர்பான நடைமுறை விளக்கத்தை அனைத்து பதிவகங்களுக்கும் தெளிவுபடுத்தவும்.
திருப்பி அனுப்பப்பட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்து உடனடி பதிவு செய்ய உத்தரவிடவும்.
இனி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த சுற்றறிக்கை வெளியிடவும்.
என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தொடர்பு:
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு