திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையில் பழனி அடிவாரம், ரயில்வே பீடர் ரோடு, கொடைக்கானல் ரோடு, கோதைமங்கலம் மற்றும் பெரும்பாறை அருகே உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த மருதமுத்து, ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 700 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பழனி நகர், அடிவாரம் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர்: சித்திர பிரகாஷ்