Mon. Mar 23rd, 2026


குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை: ஒரே நாளில் 1226 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளில் சோதனை.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1226 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் விரிவான சோதனை நடத்தப்பட்டது.

🔹 மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும், தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சரித்திர பதிவேடு பராமரித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🔹 இன்று, காவல் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மூலம் இந்த சிறப்பு சோதனை நடைப்பெற்றது.

🔹 குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கத்திலும், குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

⚠️ சோதனையில் சட்டவிரோத செயல்கள் அல்லது ஆயுதங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📰 தமிழ்நாடு டுடே
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்: Shalu V. J.

By TN NEWS