Mon. Mar 23rd, 2026



📍 துறையூர் அருகே – திருச்சி மாவட்டம்



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

🔹 தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி தலைமையில் காவலர்கள் கார்த்திக், நடராஜன், அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

🔹 அப்போது சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.5 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

🔹 விசாரணையில், சென்னை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாலதி என்பவர் அந்த தொகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

⚠️ உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், தேர்தல் நடைமுறை விதிகளின் படி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

🔹 பறிமுதல் செய்யப்பட்ட தொகை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

📢 தேர்தல் காலத்தில் பண பரிமாற்றங்களுக்கு கடுமையான கண்காணிப்பு நடைபெற்று வருவதால், பொதுமக்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

📰 திருச்சி மாவட்ட தலைமை நிருபர்: ஆர். மணி

By TN NEWS