விழுப்புரம் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாண்டிச்சேரி மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் இடைக்கல்லூரி விழாவில் சிறப்பாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இந்த விழாவில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் திறமையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி பல பரிசுகளை கைப்பற்றினர். இதன் மூலம் கல்லூரியின் கண்ணியத்தையும் உயர்த்தினர்.
பரிசு பெற்ற மாணவர்களை இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி மற்றும் பி.எஸ் கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், கல்லூரி துணைப் பேராசிரியர்களும் மாணவர்களின் சாதனையை பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் கே. மாரி