Thu. Mar 19th, 2026

மார்ச் 17 | வேலூர் மாவட்டம்

🔹 ரகசிய தகவலின் பேரில் அதிரடி சோதனை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேர்ணாம்பட்டு பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

🔹 25 கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25 ரம் மது பாக்கெட்டுகள் (Karnataka Rum Pouches) விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

🔹 ஒருவர் கைது – விசாரணை தீவிரம்:
இது தொடர்பாக, பேர்ணாம்பட்டைச் சேர்ந்த சுரேஷ் (53) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

🔹 போலீஸார் எச்சரிக்கை:
சட்டவிரோதமாக மது விற்பனை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

✍️ குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS